சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாகவும் ஜின்பிங்
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாகவும் ஜின்பிங் நேற்று (10) பதவியேற்றார்.
சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு பிறகு 2 முறைக்கு மேல் ஜனாதிபதியாகியிருக்கும் முதல் தலைவர் ஜி ஜின்பிங் ஆவார்.
2018-ல் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற சட்டத்தை நீக்கினார். இந்நிலையில் ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.