இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (20) தெரிவித்தார்.
அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை குறைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார்
எதிர்காலத்தில் விமான டிக்கெட் விலைகளை மேலும் குறைக்க அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்தார்