தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை (25) சனிக்கிழமை பத்து மணித்தியாலங்கள் முற்பகல் 11 மணி முதல் இரவு 11 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல மாநகர சபைப் பிரிவு, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபை பகுதி, கொடிக்காவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதி, ரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
திருத்தப்பணிகளுக்காக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.