தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் வரிக்கொள்கை தொடர்பில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல் இதுவரை நடைபெறாமையினால் அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.