பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற்போனவற்றை ஓரே முறையில் பூர்த்தி செய்துக்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் (21) மேல் மாகாணத்தில் சுமார் 799 வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் 8000 பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்
பயணக் கட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைவாக நிறுவனங்கள் செயல்படுகின்றதா என்பதை கண்டறிவதில் கொழும்பிலும் அதனையடுத்துள்ள பிரதேசங்களிலும் ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.