மன்னார் மாவட்ட செயலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா
மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஏற்கனவே பணிபுரிந்து இடமாற்றலாகிச் சென்ற மற்றும் ஓய்வுபெறும் உத்தியோகத்தர்களிற்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று (31) மாவட்டச் செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாட்டு செய்யப்பட்ட இந் நிகழ்வு நலன்புரி சங்கத் தலைவர் திரு செல்வகுமார் அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமானது
வாழ்த்துரைகள், ஓய்வுபெறும் உத்தியோகத்தர்கள், இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டி மெல் அவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்), பிரதம கணக்காளர், சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர், மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.