மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா விரைவில்
கமீலா பார்க்கர் இங்கிலாந்து ராணியாக அறிவிக்கப்படுவார்
ஐக்கிய இராச்சியம் – இங்கிலாந்து மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 2023 மே மாதம் 06 திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார் ஆனால் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது
முடிசூட்டு விழாவின்போது பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப் படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.
அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்தபடி சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதே தினத்தில் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார்.
இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட், மற்றொரு இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கலே ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.