வெளிநாடு
சவுதியும் ஈரானும் மூடிய தூதரகங்களை மீண்டும் திறக்க சம்மதம்
சீனா தலைமையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
சீனா முன்னெடுத்த பேச்சுவார்த்தை மூலம் மூடிய தூதரகங்களை திறப்பதாக சவுதியும் ஈரானும் பரஸ்பரம் அறிவித்துள்ளன.
சீன தலைநகர் பீஜிங்க்கில் நடந்த சந்திப்பில் சவுதி – ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்
இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு எதிர்வரும் அனைத்து தடைகளையும் அகற்றுவதற்கு இரு தரப்பினரும் தயார் நிலையில் இருப்போம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் ரியாத்திலும், தெஹ்ரானிலும் மூடப்பட்ட தூதரகங்கள் மீண்டும் திறக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது