கண்டி ASP மற்றும் அலவத்துகொடபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர், அக்குறணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகிகளைச் சந்தித்து அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கூறியது தொடர்பில் ஜம்இய்யா கவனம் செலுத்தி வருகின்றது.
இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய விசாரணைகளை நடாத்தி தகவலின் நம்பகத் தன்மையையும் அதன் விபரங்களையும் வெளிக் கொண்டு வரவேண்டுமெனவும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் தீய சக்திகளை அடையாளங்கண்டு அவற்றைத் தடுத்து நிறுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், முஸ்லிம்களின் பாதுகாப்புத் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தமாறும் வேண்டி பொலிஸ் மாஅதிபர் சந்தன டி விக்கிரமரத்ன அவர்களுக்கு, ஜம்இய்யா கடிதமொன்றை நேற்று (19) அனுப்பிவைத்துள்ளது.
மேற்படி தகவல் தொடர்பில் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.