இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களக் விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் வர்த்தகத் துறையில் விஷேட செயல்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களை பாராட்டும் நோக்கில் மேற்படி விருது வழங்கும் விழா பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் வருடாந்தம் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் உடுவே தம்மாலோக்க தேரர், பிரதி அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜீர அபேவர்தன, தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, பிரேமநாத் சீ தொலவத்த, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அர்ஜுன ரணதுங்க, BTOption முகாமைத்துவப் பணிப்பாளர் மதீ பாதிபன், கிலெண்டோ பாதிபன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.