crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீன அரசாங்கத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 8 மாடி புதிய கட்டிடம்

80 மி. அமெரிக்க டொலர் செலவில் 49,150 சதுர மீட்டர் கொண்ட புதிய வெளிநோயாளர் பிரிவு

சீன அரசாங்கத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட புதிய வெளிநோயாளர் பிரிவு இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அவர்களினால் சுகாதார அமைச்சிடம் இன்று (25) கையளிக்கப்பட்டது.

கதிரியக்க பிரிவு, புற்றுநோய்ப் பிரிவு, அறுவை சிகிச்சை மையம், நரம்பியல் அறுவை சிகிச்சை நிலையம், வெளிநோயாளர் அறுவை சிகிச்சை நிலையம், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல சிகிச்சை நிலையங்கள் வெளிநோயாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன.

எட்டு மாடிகளையும், 49,150 சதுர மீட்டர்களையும் கொண்ட புதிய வெளிநோயாளர் பிரிவு சீன அரசாங்கத்தினால் 80 மில்லியன் அமெரிக்க டொலரில் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong  சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 6 =

Back to top button
error: