பிராந்தியம்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை USAID பிரதிநிதிகள் குழு சந்திப்பு
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவை USAID பிரதிநிதிகள் குழு இன்று (26) மாவட்ட செயலகத்தில் சந்தித்தனர்.
விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கால்நடை வளர்ப்பு,நீர்ப்பாசனம் உள்ளிட்ட ஏனைய துறைகளின் போக்கு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது அரசாங்க அதிபரால் எடுத்துரைக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், USAID பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.