crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் ‘இந்திய ரூபா’ நாணய பரிமாற்றம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

இலங்கை வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலப் பயணம்’ எனும் தொனிப்பொருளில் இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் இந்திய ரூபா பெயரிடப்பட்ட நாணய அலகாக மாற்றப்படுவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல், வாங்கல்கள் மாத்திரமன்றி இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கும் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 2

Back to top button
error: