நீதி அமைச்சு. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளது.
சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கருத்திற்கொண்டு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது மேலும் ஒத்திவைக்கப்படுவதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.