
988 கைதிகளுக்கு வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (05) பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.