பிராந்தியம்
சிலாபம் சோனகத்தெரு ஜூம்ஆ பள்ளிவாசலில் “Open Mousqe” நிகழ்ச்சி

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சிலாபம் சோனகத் தெரு ஜூம்ஆ பள்ளிவாசலில் “Open Mousqe” நிகழ்ச்சி ஒன்றை நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
“Open Mousqe” நிகழ்ச்சியில் பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ, சர்வ மத தஹம், அறநெறி, மற்றும் அஹதிய்யா பாடசாலை மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் பள்ளிவாசலில் நடைபெறும் விடயங்கள், ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.