உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள், இன்று (09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் இது தொடர்பான சுற்றறிக்கை நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்