கனியங்கள் மற்றும் சுரங்க வளங்கள் தொடர்பில் பாதுகாப்பு துறையினருக்கு தெளிவூட்டல்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், கனியங்கள் மற்றும் சுரங்க வளங்கள் தொடர்பான சட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய அகழ்வு பொறியியலாளர் டபிள்யூ.எம்.ரி.யு. ஜயசிங்க தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (10) இடம் பெற்றது.
அதிகாரிகளுக்கு சட்ட ரீதியாக கனிமங்களை அகழ்வதற்கும் சட்டவிரோத கனிமங்கள் அகழ்வை தடுப்பதற்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் இவ் அகழ்வினால் சூழலுக்கு எற்படும் பாதிப்புகள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
செயலமர்வின் து விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் பங்கு பற்றியதுடன், அவர்கள் கள விஜயங்களில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், பொலன்னறுவை மாவட்ட பிராந்திய அகழ்வு பொறியியலாளர் எச்.எ.சி.கே.டபிள்யூ.பண்டார, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் சட்டபிரிவின் உதவி பணிப்பாளர் ஈ.எச்.ஆர் பிரியந்த மற்றும் புவிச்சரீதவியளாலர் டபிள்யூ, ஏ.கயும் விக்கிரமசிங்க உள்ளட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.