(அஷ்ரப.ஏ சமத்)
5000 முச்சக்கர வண்டிகளை – 5 வருடங்களுக்குள் மின்சார வாகனங்கள் அல்லது இலத்திரனியல் இயக்கத்தில் மாற்றும் திட்டம் நேற்று (11) பிலியந்தலையில் உள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திடடத்தின் வதிவிடப் பிரநிதி அசுசா குபோடா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவும் கலந்து கொண்டனர்
முதற் கட்டமாக புறக்கோட்டை, மாகும்புர கொட்டாவைப் பிரதேசத்தில் 200 முச்சக்கர வண்டி மின்சார இயக்கத்திற்கு மாற்றப்பட உள்ளன .
இத்திட்டத்தினை இலங்கை அரசுக்கு இலவசமாக ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டம் நிதி உதவி வழங்கியுள்ளது
இவ் இயக்கத்தில் மாற்றிய பின்னர் முச்சக்கர வண்டிகள் முற்றிலும் கட்டணங்கள் குறைக்கப்படும்.
10 வருடங்களுக்குற்பட்ட உற்பத்தி முச்சக்கர வண்டியாக இருத்தல் வேண்டும். 4 ஸ்ரோக் கியர் கொண்டதாகவும். தமது குடும்பத்தினை வருமானத்திற்காக முச்சக்கர வண்டியை தொழிலாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும்
ஊனமுற்றோர் , பெண்கள் முச்சக்கர வண்டி உரிமையளாராக இருப்பின் அவ்வாறவனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டப் பிரநிதி தெரிவித்தார்.