crossorigin="anonymous">
உள்நாடுபொது

கம்பளை எல்பிட்டிய யுவதியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கம்பளை வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியை சேர்ந்த பெண்ணின் சடலம் கம்பளை பதில் நீதவானின் மேற்பார்வையில் இன்று (13) தோண்டியெடுக்கப்பட்டது.

சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் அங்கு இருந்தனர். பெற்றோர் தமது மகளின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இக் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் ஆடுகளுக்கு உணவு சேகரிப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில், அந்த பக்கமாக சென்ற பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்தமையினால், அவரை பலாத்காரமாக காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று கொலை செய்து யுவதியின் சடலத்தை அந்த பகுதியிலேயே புதைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − 79 =

Back to top button
error: