crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சம்பிரதாயபூர்வ விஜயமொன்றை இன்று (25) மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர்.

பிரித்தானியாவுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும் சமுதாயச் சமையலறைக்கும் சென்று பார்வையிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 91 − = 84

Back to top button
error: