crossorigin="anonymous">
உள்நாடுபொது

அலி சப்ரி ரஹீமை எம்.பி பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோர தீர்மானம்

பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (26) நடைபெற்ற பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, அலி சப்ரி ரஹீமை சுய விருப்பத்தின் ​பேரில் விலகிச்செல்லுமாறு முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்துள்ளார்.

தற்போதுள்ள விதிமுறைகளுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்பதால், இந்த தீர்மானத்தை எடுத்ததாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுப்பது தொடர்பிலும் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 2 =

Back to top button
error: