crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை – மாலைதீவு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு கொழும்பில்

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு இன்று (06) முதல் 07 ஆம் திகதி வரை வரை கொழும்பில் உள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, 2023 ஜூன் 07ஆந் திகதி மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துடன் கூட்டு ஆணைக்குழுவின் இணைத் தலைவராக இணைந்து செயலாற்றவுள்ளார்.

இன்று திகதி நடைபெறவுள்ள கூட்டு ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்திலான கூட்டமானது, அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்கு முன்னதாக நடைபெறும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடவும், புதிய முயற்சிகள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா, மீன்பிடி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இளைஞர்கள், விளையாட்டு மற்றும் திறன் அபிவிருத்தி, தூதரக மற்றும் கலாச்சார விவகாரங்கள் உள்ளிட்ட பகிரப்பட்ட ஆர்வமுள்ள பன்முகப் பகுதிகளை உள்ளடக்கிய ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான வழிகளை மதிப்பீடு செய்யவும் கூட்டு ஆணைக்குழு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டு ஆணைக்குழுவின் பக்க அம்சமாக, இரு நாடுகளுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. முந்தைய கூட்டு ஆணைக்குழு மாலைதீவில் பிப்ரவரி 2017 இல் நடைபெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 35 = 45

Back to top button
error: