crossorigin="anonymous">
வெளிநாடு

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசின் இரகசிய ஆவணம் எடுத்துச்சென்றதாக குற்றச்சாட்டு

டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் பதவி வகித்தார். அவர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியபோது அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அமெரிக்காவின் மியாமி நீதிமன்றத்தில், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இன்று (13) செவ்வாய்க்கிழமை அமெரிக்க மியாமி நீதிமன்றத்தில் ட்ரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வீடு, அலுவலகங்களில் எப்பிஐ புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திபோது 11,000 அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 100 ஆவணங்கள், அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் ஆகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 − 46 =

Back to top button
error: