crossorigin="anonymous">
உள்நாடுபொது

வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி

ஆகஸ்ட் மாதம் 11, 12,13ஆம் திகதிகளில்

(எம்.ஐ.நிசாம்தீன்)

வடக்கின் அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தின் நிலையான வர்த்தகம் ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு ஆகஸ்ட் மாதம் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வினை வடக்கு வர்த்தக தொழிற்துறையும் சிடிசி நிறுவனமும் இணைந்து நடாத்துவதுடன் இலங்கைக்கான யாழ்ப்பாண இந்திய துணைத் து{தரகம் ஆதரவினையும் வழங்க உள்ளது.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக ஆரம்பிக்கப்பட உள்ள இந்த வர்த்தகக் கண்காட்சியின் ஊடாக மாகாணத்தின் வர்த்தக தொடர்புகள் மற்றும் சந்தை வாய்ப்பினை அடையாளம் காணக் கூடியதாக இருக்கும். அவ்வாறே, வடக்கின் அபிவிருத்திக்கு இந்த சந்தை வாய்ப்பு பாரிய உந்து சக்தியாக அமையுமென சிடிசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் இம்ரான் ஹசன் தெரிவித்தார்.

இந்நிகழ்வு தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு ரமடா ஹோட்டலில் (13) நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“வடமாகாணத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் இக்கண்காட்சியானது இலங்கையின் பொருளாதாரத்துக்கு மேலும் உந்து சக்தியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் வடக்கினை மையப்படுத்தி நடத்தப்படும் போது தெற்கு உட்பட ஏனைய மாகாணங்களின் வர்த்தக சமூகத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

ஆகஸ்ட் மாதம் எனும் போது யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கோயில் திருவிழா நடைபெறும் காலப்பகுதியாகும். வெளிநாட்டவர்கள், அயல் நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இந்நிகழ்வுக்காக வருகை தருவார்கள். ஆகவே தான் நாமும் இந்த காலப்பகுதியை மையப்படுத்தி நிகழ்வினை நடத்த உள்ளோம்.

இதற்கு மேலதிகமாக இந்திய துணைத் தூதரகம் எமக்கு பல்வேறு வழிகளில் ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இக்கண்காட்சியில் 150இற்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 40 கூடங்கள் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சமூகத்திற்கும் ஏனைய கூடாரங்கள் வெளிநாட்டு மற்றும் பிற மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

ஆகவே, இந்திய வர்த்தகர்களின் பங்களிப்பு பாரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அதே வேளை, இலங்கை இந்திய கப்பல் சேவை இதற்கு மேலும் பலமாக இருக்கும். கப்பல் சேவையின் ஊடாக 100 கிலோ எடுத்து வரக்கூடியதாக இருக்கும். இது மாத்திரமன்றி வடக்கிற்கான வான்வெளி சேவையையும் விரிவுபடுத்த உல்லாசத்துறை அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது” எனவும் சிடிசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் இம்ரான் ஹசன்  குறிப்பிட்டார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 + = 61

Back to top button
error: