ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் இன்று (19) ஆரம்பமாகியுள்ளதுடன் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நாளை மறுதினம் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Turk வாய்மொழி மூல உரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான 51/1 தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி, ஊழல் மோசடிகளால் மனித உரிமைகளுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது.