111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் பார்வையிட கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.
கடலுக்குள் சென்ற நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பல் சிதைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 1,600 அடி (487 மீ) தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்துள்ளனர்
ஹாமிஷ் ஹார்டிங் – 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்
ஷாஸாதா தாவூத் – 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.
சுலேமான் தாவூத் – ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்
பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். .
ஸ்டாக்டன் ரஷ் – 61 வயதான இவர்தா
நீர்மூழ்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் தொடங்கி 1.45 மணி நேரத்தில் நீர்மூழ்கியுடன் இருந்த தகவல் தொடர்பு நின்றுபோயுள்ளது.