சீன அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவிற்கும் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று (20) சந்திப்பொன்று இடம்பெற்றதோடு இதில் இரு தரப்பினரும் சமூக,பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் பல்வேறு பரஸ்பர கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த தூதுக்குழுவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் விவகாரப் பிரிவின் உறுப்பினரும், மத்திய குழுவின் சோங்கிங் மாநகர குழுவின் செயலாளருமான H.E. Yuan Jiajun அவர்கள், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் H.E. Qi Zhenhong அவர்கள், பிரதி அமைச்சரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் பிரதானியுமான Guo Yezhou அவர்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சோங்கிங் மாநகர குழுவின் நிலைக்குழு உறுப்பினரும், நிறைவேற்று பிரதி மேயருமான Chen Mingbo அவர்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோங்கிங் மாநகர குழுவின் நிலைக்குழு பொதுச் செயலாளர் Luo Lin,சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் பணியகத்தின் பொதுச் செயலாளர் Peng Xiubin, சீன தூதரகத்தின் தூதுக்குப் பிரதிப் பிரதானி Hu Wei, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோங்கிங் மாநகர குழுவின் துணைப் பொதுச்செயலாளர் Guan Zhongxiao,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் Protocol பணியகத்தின் பனிப்பாளர் நாயகம் Shangguan Hongjun,மேதகு சேர் யுவான் ஜியாஜுங்கின் செயலாளர் Wu Xiaoyu, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் பணியக பனிப்பாளர் Cui Xiang, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் பணியகத்தின் பிரதி பனிப்பாளர் Wen Jun,சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் உரைபெயர்ப்பாளர் Liu Yuwenshi ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.