crossorigin="anonymous">
உள்நாடுபொது

முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நீக்கம்

முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலைநேற்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போட்டித் தன்மையில் விலையை தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வௌ்ளை முட்டைக்கு 44 ரூபாவும், சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும் என நிர்ணய விலையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 9 = 14

Back to top button
error: