ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi நாளை 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்
விஜயத்தின்போது வௌிவிவகார இலங்கை அமைச்சர் அலி சப்ரியுடன் ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வௌிவிவகார அமைச்சருடன் சிரேஷ்ட வௌியுறவுக் கொள்கை ஒருங்கிணைப்பாளர், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் அரிமா யுடகா, சர்வதேச ஒத்துழைப்பிற்கான பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 22 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரும் இலங்கை வர உள்ளனர்
அவகள் ர் மரியாதை நிமித்தம் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.