crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் தடை பட்டியலிலிருந்து நீக்கம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய அமைப்பு என்ற\வகையில் தடை செய்யபட்டிருந்த 5 இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்கள் அப்பட்டியலிலிருந்து (26) நீக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ), சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ), சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ) ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ-அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா ஆகிய 5 இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்கள் தடை செய்யபட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த தடை நீக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் வகையில், கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/ 3 எனும் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலிலிருந்தே இந்த 5 இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 + = 68

Back to top button
error: