ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு நடாத்தப்படும் ஊடகக் கருந்தரங்கு நாளை (29) சனிக்கிழமை மாவனல்லை பதுரியா மத்திய கல்லுாாியில் நடைபெறவுள்ளன
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் பாடசாலைகளில் கற்கும் சிரேஷ்ட மாணவர்களுக்கு நடாத்திவரும் 74வது ஊடகக் கருந்தரங்கு காலை 09.00 மணி முதல் பி.ப.05. 00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வுகளை மாவனல்லை பதுரியா மத்திய கல்லுாரியின் பழைய மாணவியர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் பதுரியா மத்திய கல்லுாாியின் அதிபர் ஏ.எல்.ஏ ரஹ்மான் ஆகியோர்களின் தலைமையில் இரு அரங்குகளாக கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது.
”21ஆம் நுாற்றாண்டில் ஊடகம் ”எனும் தலைப்பில் நடைபெறும் இக் கருத்தரங்கில் போரத்தின் செயலாளர் சிஹார் அனீஸ், கலாநிதி எம்.சி. ரஸ்மின், மீடியா போரத்தின் உபதலைவர்களுள் ஒருவரான எம்.ஏ.எம் நிலாம், ஆலோசகர் தாஹா முசம்மில், ஊடக ஒருங்கினைப்பாளர் ஜாவித் முனவ்வர், போரத்தின் இணை தேசிய அமைப்பாளர் சாதிக் சிஹான், போரத்தின் பொருளாளர் எம்.எம். ஜெஸ்மின், போரத்தின் ஊடக இணைப்பாளர் அஷ்ரப் ஏ சமத். ஆகியோர்களும் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்துவார்க்ள.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை புகழ் கலைஞர்களான மஹ்தியசன் இப்ராஹீம், திருமதி நெய் ரஹீம் சஹீட் ,திக்குவல்லை ஸப்பான், திக்குவல்லை ஸும்ரி ஆகியோர்களும் கலந் கொண்டு சஞ்சாரம் எனும் மேடை நாடக நிகழ்ச்சி ஒன்றையும் நடாத்த உள்ளனர்
.
அன்றைய தினத்தில் பிற்பகல் நடைபெறும் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பங்களதேஷின் உயர்ஸ்தானிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம் கலந்து கொள்வார்.
கௌரவ அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக இஸ்லாமிய அரபு கற்கைத் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி எம்.ஜ.எம். அமீன் கலந்து கொள்வுள்ளார்.
இந் நிகழ்வில் போரத்தின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் அமீர் ஹூசைன், ஆதில் அலி சப்ரி மற்றம் ஊடகவியலாளர் பாரா தாஹீர் ஆகியோர் உட்பட பதுரியா மத்திய கல்லுாரியின் பழைய மாணவிகளும் கலந்து கொள்கின்றனர்