ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (Yoshimasa Hayashi) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு (28) இலங்கை வந்தடைந்தார்.
விஜயத்தின்போது வௌிவிவகார இலங்கை அமைச்சர் அலி சப்ரியுடன் ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மரியாதை நிமித்தம் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.