crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர இன்று (29) மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர இன்று முற்பகல் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரையின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் சிகிச்சை பெற்று வந்த தரிந்து உடுவரகெதரவை பார்வையிடுவதற்கு புதுக்கடை பதில் நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று பிற்பகல் அங்கு சென்றிருந்தார் இதன்போதே, தரிந்து உடுவரகெதர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோத கூட்டமொன்றில் கலந்துகொண்டமை, அரச ஊழியருக்கு அழுத்தம் விடுத்தமை உள்ளிட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் தரிந்து உடுவரகெதர நேற்று (28) கைது செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது குறித்து உள்நாட்டு வெளிநாட்டு பல ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 − 72 =

Back to top button
error: