ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த “21 ஆம் நூற்றாண்டில் ஊடகம்” எனும் தொனிப்பொருளில் 74 ஆவது ஊடகக் கருத்தரங்கு சனிக்கிழமை (29) மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம்.அமீன் மற்றும் பதுரியா மத்திய கல்லூரி அதிபர் ஜனாப் ஏ.எல்.ஏ. ரஹ்மான் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இரு அங்கங்களாக நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பாடசாலை மாணவர்களுக்காக நாடளாவிய ரீதியில் நடத்தி வரும் ஊடாக வழிகாட்டல் பயிற்சி பட்டறையின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இக்கருத்தரங்கி பதுரிய்யா மத்திய கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.
ஊடகத்துறை விரிவுரையாளரான கலாநிதி எம்.சி.ரஸ்மின், போரத்தின் ஆலோசகரான சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில், போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் ஊடக இணைப்பாளர்களான ஜாவித் முனவ்வர், அஷ்ரப் ஏ சமட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்ண்டு பயிற்சிகளை வழங்கினர்.
கருத்தரங்கின் இறுதியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம் பிரதம அதிதியாகவும், பேராதனைப் பல்கலைக்கழக இஸ்லாமிய அரபு கற்கைத் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் ஊடாக கழக மாணவர்களுக்கானா சின்னங்கள், பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவிகளுக்கான சான்றிதழ்களை பிரதம அதிதியான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த இக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் கல்விமானுமாகிய கலாநிதி எம் ஐ எம் அமீன் பதுரிய்யா பழைய மாணவியர் சங்கம் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் மீடியா போரத்தின் பொருளாளர் ஜனாப் எம் எம் ஜெஸ்மின், உப தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.எம் நிலாம், போரத்தின் தேசிய அமைப்பாளர் ஸாதிக் ஷிஹான், மீடியா போரத்தின் கேகாலை மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ் அமீர் ஹுஸைன், மீடியா போரத்தின் உறுப்பினரும் வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளருமான சித்தீக் ஹனீபா, மேற்படி கல்லூரியின் பழைய மாணவியும் ஊடகவியலாளருமான திருமதி பாரா தாஹிர், பதுரிய்யா கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத் பொதுச் செயலாளர் டாக்டர் எம் ஜே எப் ஜமீனா, பதுரியா மத்திய கல்லுாரியின் பழைய மாணவிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.