தரம் குறைபாடு காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6 மருந்துகளும் தரம் குறைபாடு காரணமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள மருந்து பட்டியலில் இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தொன்றும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.