வெளிநாடு
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானம்
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விவாதம்
இந்தியா – மணிப்பூர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு எதிராக இந்திய எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் இன்று (08) நடைபெறுகிறது.
ராகுல் காந்தி, மனீஷ் திவாரி, கவுரவ் கோகோய் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றவுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் சரியாக பகல் 12 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை விவாதம் நீடிக்கும்.
ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை இதே நேரத்தில் விவாதம் நடைபெறவுள்ளதுடன் . ஆகஸ்ட் 10 ஆம் திகதி அன்று மாலை 4 மணியளவில் இந்திய பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.