crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘பாராளுமன்ற விசேட பெரும்பான்மை + சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீககாரம் வேண்டும்’

பிரதேச, நகர, மாநகர சபைகள் திருத்த சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பிரதேச சபைகள் (திருத்தம்)”, “நகர சபைகள் (திருத்தம்)” மற்றும் “மாநகர சபைகள் (திருத்தம்)” எனும் மூன்று சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்தச் சட்டமூலங்கள் மூன்றிலும் 2 ஆம் வாசகம், அரசியலமைப்பின் உறுப்புரை 1, 12(1), 82, 83 மற்றும் 104ஆ ஆம் உறுப்புரையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் இணங்காததுடன், “பிரதேச சபைகள் (திருத்தம்)”, “நகர சபைகள் (திருத்தம்)” மற்றும் “மாநகர சபைகள் (திருத்தம்)” எனும் இந்த மூன்று சட்டமூலங்களும் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டு

அரசியமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கிகரிக்கப்படுதல் வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 − = 55

Back to top button
error: