crossorigin="anonymous">
பிராந்தியம்

சகல சமயங்களையும் சேர்ந்த அறநெறிக் கல்வியை மேம்படுத்த கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து சமயங்களையும் சார்ந்த சமய. ஒழுக்கக் கல்வியை மேம்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (09) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து சமயங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் சமயத்தலைவர்கள் அனைத்து சமயங்களையும் சார்ந்த அறநெறிப் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்

மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன்(நிர்வாகம்),பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.லிங்கேஸ்வரன்,பிரதம கணக்காளர் திரு.ம. செல்வரட்ணம் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக், மாவட்ட , சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து சமயங்களையும் சார்ந்த சமய ஒழுக்கக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சமய ஒழுக்கக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,சமய ஒழுக்கக் கல்விப் பாடசாலைகளை வலுப்படுத்துதல் என்பவற்றுடன் ஞாயிறு தினங்களில் மாணவர்கள்,சமய ஒழுக்கக் கல்விப் பாடசாலைக்கு செல்வதை ஊக்கப்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் ஞாயிறு தினங்களில் தனியார் கல்விச் செயற்பாடுகளை தவிர்பதற்கு தனியார் கல்வி நிறுவன உரிமைதாரர்களிடம் வேண்டுகோள் விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 − 12 =

Back to top button
error: