வெளிநாடு
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கம்
இந்தியா விண்வெளி பயணத்தில் புதிய மைல்கல்
இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது . நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணி அளவில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ளது
சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் “இந்தியா நிலவில் உள்ளது” என்று அறிவித்துள்ளார்
நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.