சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சு அன்பளிப்பாக வழங்கிய 11 விசேட தொடர்பாடல் வாகனங்களை நேற்று (22) இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டது.
இந்நிகழ்ச்சி இராணுவ தலைமையகத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க மற்றும் இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேணல் ஷோஹுபோ ஆகியோர் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.