இலங்கை வௌியுறவு அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு வருவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
நாரா எனப்படும் இலங்கையின் நீர்வள மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் கடந்த வருடம் ஏப்ரல் 20 ஆம் திகதியும் இலங்கைக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது