crossorigin="anonymous">
ஆக்கங்கள்

“தேயிலை கொழுந்தின் தொலை நோக்கு பார்வை” ஆய்வு கட்டுரை வெளியீடு

இந்தியவம்சாவளி மக்கள் மலையகத்தில் குடியேரி 200 வருடங்கள்

இந்தியவம்சாவளி மக்கள் மலையகத்தில் குடியேரி 200 வருடங்கள் கடந்திருக்கும் வேளையில் “மலையகம் 200” ஆண்டு கால வரலாற்றை நினைவு கூறும் முகமாக “தேயிலை கொழுந்தின் தொலை நோக்கு பார்வை” என்ற தலைப்பின் கீழ் தேயிலை தோட்ட வரலாறு மற்றும் தொழிற்சங்க வளர்ச்சி தொடர்பான ஆய்வு கட்டுரை வெளியீட்டு வைபவம் நுவரெலியா கொல்ப் கழக மண்டபத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்றுள்ளது

கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக இயக்குனரும் சட்டத்தரணியுமான ஏ. பி. கணபதிபிள்ளை புத்தகமாக வெளியிட்டு வைத்தார்.

இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜி. வீரசிங்க கலந்துகொண்டுள்ளனர்

சிறப்பு பேச்சாளராக தோட்ட நிர்வாகி ஹேர்மன். எம். குணரட்ன, தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு முன்னாள் செயலாளர் எம். வாமதேவன், கண்டி சர்வதேச பாடசாலை அதிபர் ஹசிரா சவாஹிர், மாத்தரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க வீரசுமன கலந்துகொண்டுள்ளனர்

வைபவத்திற்கு விசேட பிரதி நிதிகளாக முன்னாள் அமைச்சர் தியூ குணசேக்கர, கியூபா நாட்டு இலங்கை பிரதிநிதி எம். கொன்சலாஸ் கரீடோ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் வைபவத்தில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுப்பையா சதாசிவம், சட்டத்தரணி பி. இராஜதுரை உட்பட சட்டத்தரணிகள் கல்விமான்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 42 − = 37

Back to top button
error: