crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்

இலங்கையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு இன்றிரவு (23) பத்து மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக் கிழமை (25) அதிகாலை 4 மணி வரை அமுவ்படுத்தப்படவுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக் கட்டுப்பாடு நேற்று முன்தினம் அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பிலான குற்றம் உறுதி செய்யப்படும் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் வழங்கப்படும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 + = 36

Back to top button
error: