இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
“பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்),” “ஒதுக்கீடு (திருத்தம்)” மற்றும் “இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம்” எனும் சட்டமூலங்கள் கடந்த 21ஆம் திகதி இவ்வாறு சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டன.
இதற்கமைய
பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்த) சட்டமூலம் 2023ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமாகவும்,
ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் 2023ஆம் ஆண்டு 12ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமாகவும்,
இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்த) சட்டமூலம் 2023ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்த) சட்டமாகவும்
கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.