இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இம்மாதம் எதிர்வரும் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் இலங்கை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் செப்டெம்பர் 08ஆம் திகதி 5.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.