வெளிநாடு
சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் தெரிவு
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்தவர்
சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.
இதில், 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று பெருவாரியான வெற்றியை தர்மன் சண்முகரத்னம் பதிவு செய்துள்ளார்.
அன்னாச்சி பழத்தைத் தனது பிரசார சின்னமாக கொண்டு தர்மன் இந்த தேர்தலை சந்தித்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காக் சோங் 15.7 சதவீத வாக்குகளையும் டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். இவரது தந்தை கனகரத்னம் சண்முகரத்னம் சிங்கப்பூரின் பிரலமான நோயியல் நிபுணராக இருந்தவர்.