(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 157வது வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட இஸ்லாமிய சமய நிகழ்வு ஒன்றினை கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையமும் கொழும்பு பெரிய பள்ளிவாசலும் இணைந்து இன்று (02) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தலைவர் தாஹிர் றசீன் தலையைமயில் ஏற்பாடு செய்திருந்தன.
பள்ளிவாசலின் பிரதம இமாம் றிஸ்வான் ஹாபிஸ் விசேட துஆப் பிரார்த்தனையை மேற் கொண்டார்.
இதன்போது பள்ளிவாசலின் தலைவர் வரவேற்புரையையும் பொலிஸ் பொறுப்பதிகாரி அஜித் பேதுரு ஆராச்சி பொலிஸ் திணைக்களத்தின் 157வது தின உரையையும் நிகழ்த்தினார்.
பள்ளிவாசலின் செயலாளர் பாரிஸ் பாஹிம், பொருலாளர் பஸால் மொஹிடீன், முன்னாள் தலைவர் தௌபீக் சுபைர் மற்றும் நிருவாகிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற நிகழ்வில் டேம் வீதி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி அஜித் பேதுரு ஆராச்சி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் பெரிய பள்ளிவாசலின் அறபுக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.