மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் நிகழ்வுகளில் பிரதான நிகழ்வு இன்று (06) பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நூற்றாண்டு பூர்த்தி பிரதான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்
பாடசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்
இந்த நிகழ்வின்போது பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்படும்
நூற்றாண்டு சிறப்பு சஞ்சிகையும் ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் அவர்களின் வருகையையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன