crossorigin="anonymous">
உள்நாடுபொது

“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பரில் கொழும்பில் நடத்த ஏற்பாடு

டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று தூண்களாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் நகரம் மற்றும் நிதி தொழில்நுட்பம் (FinTech) தொடர்பான API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் 16 ஆம் திகதி கொழும்புசங்ரீலா ஹோட்டலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “DIGIECON Sri Lanka 2023 – 2030” நிகழ்ச்சித் திட்டத்திற்கு “API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக நேற்று (06) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலுவூட்டல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 500க்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன் நடத்தப்படவுள்ள இந்த மாநாடு இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனத்தினால் (FITIS) இந்நாட்டில் இரண்டாவது முறையாக ஏற்பாட்டு செய்யப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − = 25

Back to top button
error: